×

மாநகர காவல் ஆணையர் வழங்கினார் உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் சார்பில் பேரணி

திருச்சி: உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் (Butterflies கிளை) இணைந்து நடத்திய பேரணி 17ம் தேதி காலை 8 மணிக்கு அட்லஸ் மருத்துவமனையில் தொடங்கி, கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் சாலை கோகினூர் தியேட்டர், மேரிஸ் திரையரங்கு ஜோசப் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக அட்லஸ் மருத்துவமனையை வந்தடைந்தது. இந்த பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, ரோட்டரி Dist President Chief கார்த்திக் தொடங்கி வைத்தார் இந்த பேரணியில் ரோட்டரி Butterflies தலைவர் சுபா, ரோட்டரி Butterflies செயலாளர் பராசக்தி. ரோட்டரி Butterflies பொருளாளர் ரேவதி மற்றும் அட்லஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர் எஸ்.ஜெய்கிஷ், மருத்துவமனையின் செயல் இயக்குநர் கீதா சங்கரி, எலும்பு மூட்டு மருத்துவர்கள் பாலாஜி, அபிலேஷ், காலித் செரிப் மற்றும் செவிலியர் செவிலிய மாணவர்கள், மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் சாலை விபத்து மற்றும் தீவிபத்துக்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post மாநகர காவல் ஆணையர் வழங்கினார் உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் சார்பில் பேரணி appeared first on Dinakaran.

Tags : City Police ,Commissioner ,Atlas Hospital ,Rotary Club ,World Accident and Injury Day ,Trichy ,Butterflies Branch ,Police Commissioner ,Atlas Hospital and ,Dinakaran ,
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு